நேற்று 44 ஆக இருந்த மரண எண்ணிக்கை இன்று 36 ஆகக் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,902 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு நாளில் தொற்றுகளில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,990 ஆகும். இதனைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 426,319 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தற்போது மருத்துவமனைகளில் 41,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 520 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 272 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
405 தொற்றுகளுடன் சரவாக் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் வாரியான தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.