Home உலகம் இஸ்ரேல் தாக்குதல் : அல் ஜசீரா அலுவலகக் கட்டடம் தரைமட்டம்

இஸ்ரேல் தாக்குதல் : அல் ஜசீரா அலுவலகக் கட்டடம் தரைமட்டம்

736
0
SHARE
Ad

ஜெருசலம் : இஸ்ரேல் – ஹாமாஸ் இடையிலான மோதல்களைத் தொடர்ந்து ஹாமாஸ் போராளிக் குழுக்களின் இலக்குகளை நோக்கி இஸ்ரேல் குண்டு வீச்சுகளை நடத்தி வருகிறது.

காசா நகர் பகுதியில் பிரபல தொலைக்காட்சி ஊடகமான அல் ஜசீரா அலுவலகங்களும் மற்ற ஊடகத் துறை அலுவலகங்களும் அமைந்துள்ள 11 மாடிக் கட்டடம் இஸ்ரேலிய குண்டுவீச்சினால் முற்றாகத் தரைமட்டமானது. அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனமும் இங்குதான் தனது அலுவலகத்தைக் கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டடத்தில் குடியிருப்புகளும் இருந்தன. அந்தக் கட்டடத்தில் உள்ளவர்களுக்கு 1 மணிநேரத்துக்கு முன்பாகத்தான் அனைவரையும் கட்டடத்தில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்தக் கட்டடத்தில் ஹாமாஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தங்கியிருந்தார்கள் என இஸ்ரேலியத் தரப்பு உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக அசோசியேட்ஸ் பிரஸ் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் தொடர்ந்து காசா பகுதி மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹாமாஸ் இயக்கத்தினர் அவர்களின் மையங்களின் மீதுதான் தாங்கள் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது.