Home நாடு 1எம்டிபி: நஜிப் சட்டவிரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம்- சாட்சி

1எம்டிபி: நஜிப் சட்டவிரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம்- சாட்சி

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொழிலதிபர் ஜோ லோவுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

1எம்டிபியின் 2.28 பில்லியன் ரிங்கிட் நிதி சம்பந்தப்பட்ட நஜிப்பிற்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணையின் போது முகமட் ஹஸீம் அப்துல் ரஹ்மான் இந்த விஷயத்தை வெளிப்படுத்தினார்.

ஜோ லோவின் எண்ணம் குறித்த சந்தேகங்கள் குறித்து நஜிப்பிடம் ஏன் சொல்லவில்லை என்று தற்காப்பு வழக்கறிஞர் வான் ஐசுடின் வான் முகமட் விசாரித்தபோது சாட்சி இந்த விஷயத்தை கூறினார்.

#TamilSchoolmychoice

பிப்ரவரி 8 அன்று, ஜோ லோ 1எம்டிபியை நிர்வகிக்கிறார் என்று சாட்சியம் அளித்ததுடன், ஜோ லோவின் அறிவுறுத்தல்கள் அந்த நேரத்தில் நஜிப்பிலிருந்து வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.