Home நாடு பேரங்காடியில் நோன்பு பெருநாள் சந்திப்புகளை நடத்துவதை நிறுத்தவும்

பேரங்காடியில் நோன்பு பெருநாள் சந்திப்புகளை நடத்துவதை நிறுத்தவும்

421
0
SHARE
Ad

புத்ராஜெயா: நோன்பு பெருநாளின் போது விருந்தினர் வருகைகள் அனுமதிக்கப்படாத நிலையில், சில குடும்பங்கள் திறந்த வெளியில் பேரங்காடிகளில் சந்திப்புகளை நடத்த முயல்வது குறித்து சுகாதார அமைச்சகம் கவலை கொண்டுள்ளது.

இந்த சந்திப்புகள் கொவிட் -19 தொற்று பரவுவதில் நெருக்கடியைத் தூண்டக்கூடும் என்று அமைச்சகம் அஞ்சுகிறது.

நோன்பு பெருநாளுக்கு வீட்டுக் கட்டுப்பாடு இருந்ததால் பேரங்காடிகளில் சந்திப்புகள் நடத்துவது ஆபத்தான விஷயம் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதால், தொற்றுக் குழுக்களைத் தூண்டக்கூடிய மையப் புள்ளிகளில் இது போன்ற ஒன்று கூடல்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.