Home வணிகம்/தொழில் நுட்பம் மிகா-ஐ: இஸ்லாமிய தங்க வங்கி கணக்கை அறிமுகப்படுத்திய மேபேங்க்

மிகா-ஐ: இஸ்லாமிய தங்க வங்கி கணக்கை அறிமுகப்படுத்திய மேபேங்க்

570
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மேபேங்க் தனது மேபேங்க் இஸ்லாமிய தங்க கணக்கை (மிகா-ஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கின் மூலம் தங்கத்தை வாங்கவும், விற்கவும், மாற்றவும் அனுமதிக்கிறது. இவை அனைத்தும் இயங்கலையில் மேபேங்க்2யூ வங்கிதளம் வழியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். மேலும் 10 ரிங்கிட் வரை குறைந்த விலையில் வாங்க அல்லது விற்க பரிவர்த்தனைகளை செய்யலாம்.

#TamilSchoolmychoice

“எல்லோரும் 10 ரிங்கிட் குறைந்த ஆரம்ப முதலீட்டில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். சந்தையில் மிகவும் கவர்ச்சிகரமான தங்க விலையை வாடிக்கையாளர்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக 100 கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட முதலீட்டைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை விகிதம் வழங்கப்படும்,” என்று மிகா வங்கி இஸ்லாமிய தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ரபீக் மெரிக்கன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.