Home நாடு தன்னார்வ அடிப்படையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற சரவாக் ஒப்புதல்

தன்னார்வ அடிப்படையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற சரவாக் ஒப்புதல்

529
0
SHARE
Ad

புத்ராஜெயா: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற மாநில மக்கள் தானாக முன்வந்து பயன்படுத்த சரவாக் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக, தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகையில், சரவாக் இத்திட்டத்தை செயல்படுத்த, சிறந்த முறைகள் குறித்து தனது தரப்பு மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படும் என்று கூறினார்.

“சரவாக் தானாக முன்வந்து அஸ்ட்ராசெனெகாவைப் பயன்படுத்த ஒப்புக் கொண்டது. மேலும் அதை மாநிலத்தில் செயல்படுத்த சிறந்த முறை குறித்து மாநில சுகாதாரத் துறையுடன் தொடர்புகொள்வோம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சரவாக் தவிர, அஸ்ட்ராசெனெகா பயன்பாட்டின் இரண்டாம் கட்டம் ஜோகூர், பினாங்கு மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு வரை நீட்டிக்கப்படும் என்பதையும் கைரி உறுதிப்படுத்தினார்.