Home நாடு கொவிட்-19 பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்

கொவிட்-19 பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்

802
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசி செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால் மலேசியா தொடர்ந்து தொடர்ச்சியான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை தொடர்ந்து செயல்படுத்துவதால் தொற்றுநோய் பரவுதல் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்று நம்பிக்கை கூட்டணி கொவிட் -19 தடுப்பூசி குழு கூறியுள்ளது.

மே 10 முதல் மே 15 வரையிலான தரவுகளின் அடிப்படையில், நாட்டின் மக்கள்தொகைக்கு கொவிட் -19 தொற்றுக்கு ஆளான விகிதம் 6.83 விழுக்காடாக இருந்துள்ளதாக இன்று ஓர் ஊடக அறிக்கை மூலம் இந்த விஷயத்தை இக்குழு விளக்கியது.

#TamilSchoolmychoice

இந்த விகிதம் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை விட அதிகமாக உள்ளது என்று குழு கூறியது.

போதுமான பரிசோதனைகளை நடத்தவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டியுள்ளதாகவும், இதனால் தினசரி சம்பவங்களின் உண்மையான எண்ணிக்கை நாட்டின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காது என்ற தோற்றத்தை அளிக்கிறது என்றும் அது கூறியது.

“நம்மால் சிக்கலைத் துல்லியமாக தீர்க்க முடியாவிட்டால், பிரச்சனையைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் பெரும் சுமையை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை நாம் நம்பியிருக்க வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் மற்றும் கொவிட் 19 தடுப்பூசி அணுகல் சிறப்பு சிறப்புக் குழு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குழு கூறியது.