Home நாடு வீட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தல் இன்று தொடங்கியது

வீட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தல் இன்று தொடங்கியது

492
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் விடுமுறைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, பள்ளி மாணாவர்களுக்கான வீட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தல் இன்று குழு பி பள்ளிகளுக்கு ஆரம்பமானது.

குழு பி பள்ளிகளுக்கு (பெர்லிஸ், பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், சபா, சரவாக், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா பள்ளிகள்) வீட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தல் இன்று முதல் மே 28 வரை தொடரும். குழு ஏ பள்ளிகளுக்கு, (ஜோகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு பள்ளிகள்) நேற்று தொடங்கி மே 27 வரை தொடரும்.

இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பல பெற்றோர்கள் கல்வி அமைச்சின் முடிவுக்கு ஆதரவு தந்துள்ளனர்.