Home நாடு சிலாங்கூரில் முழுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம்

சிலாங்கூரில் முழுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம்

570
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தவறினால், சிலாங்கூரில் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் அல்லது முழு அளவிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாக டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தினசரி சம்பவங்களை சிலாங்கூர் பதிவு செய்து வருகிறது. நேற்று மட்டும் சிலாங்கூரில் 1,275 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.