Home நாடு கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பிபைசர் தடுப்பூசியைப் பெற அறிவுறுத்து

கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பிபைசர் தடுப்பூசியைப் பெற அறிவுறுத்து

425
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கொவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ள முன்வந்தால் பிபைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

சினோவாக் மற்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இந்தப் பிரிவு பெண்களுக்கு இப்போது பரிந்துரைக்கப்படவில்லை என்றும், தடுப்பூசிகளில் ஏதேனும் சந்தேகம் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.