Home நாடு அடாம் பாபா மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையில் புகார்

அடாம் பாபா மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையில் புகார்

468
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவினர் சுகாதார அமைச்சர் அடாம் பாபா உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.

கொவிட் தொற்று பாதிப்புகளை கவனக் குறைவாகக் கையாண்டதற்காக அமைச்சர்கள் மீது இந்தக் குழுவினர் புகார் செய்துள்ளனர்.

அதிகரித்து வரும் கொவிட் தொற்றுகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு மீது விசாரணைகளும், புலனாய்வுகளும் தொடங்கப்பட வேண்டுமெனவும் அந்தக் குழுவினர் தங்களின் புகாரில் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் உள்ள பந்தாய் காவல் நிலையத்தில் இந்தப் புகார்கள் நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்யப்பட்டன.

தொடக்கம் முதற்கொண்டு அடாம் பாபாவின் கருத்துகளும், பேச்சுகளும் சர்ச்சையாக்கப்பட்டு வந்திருக்கின்றன.

ஒருமுறை நான் 500 நாட்டு தலைவர்களிடம் கொவிட் தாக்கம் குறித்து பேசியிருக்கிறேன் என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கொவிட் தொடங்கிய காலத்தில் கைகழுவுவது எப்படி என்ற விளக்கக் காணொலியை அவர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஒருமுறை கொவிட் தொற்றைப் போக்க சுடுதண்ணீர் குடியுங்கள் என்று கூறி கண்டனங்களுக்கு உள்ளானார்.