Home நாடு ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

456
0
SHARE
Ad

கோலாலம்பூர் :நாடு தழுவிய அளவில் பல மருத்துவமனைகளில் இன்று காலை 11.00 மணி தொடங்கி திட்டமிட்டபடி ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது.

அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க வேண்டும், மருத்துவர்களாக தாங்கள் செய்து கொண்ட சத்தியப் பிரமாணத்தை அவர்கள் மதிக்க வேண்டும் என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் நேற்றிரவு இறுதிநேர வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் ஒப்பந்த மருத்துவர்கள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை இன்று நடத்தியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்தப் போராட்டத்தில் நாடு தழுவிய அளவில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள் என அறியப்படுகிறது.

பல மருத்துவர்கள் தங்களின் முகநூல் பக்கங்களில் தங்களின் போராட்டத்தைக் காட்டும் காணொலிகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டனர்.

சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் சுமார் 23 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்களுக்கான புதிய சலுகைகள் அடங்கிய அமைச்சரவையின் முடிவு குறித்து மொகிதின் யாசினின் அறிவிப்பு தங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை எனவும் ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இன்று காலை 11.00 மணியளவில் ஒப்பந்த மருத்துவர்கள் தங்களின் பணிகளை நிறுத்தி விட்டு வெளிநடப்பு செய்தனர்.

கோலாலம்பூர் பொது மருத்துவமனையிலும் மருத்துவர்கள் ஹர்த்தால் போராட்டம் நடத்தினர்.