Home நாடு சரவாக்கில் புதிய வகை கொரோனா நச்சுயிரி கண்டுபிடிக்கப்பட்டது

சரவாக்கில் புதிய வகை கொரோனா நச்சுயிரி கண்டுபிடிக்கப்பட்டது

516
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில ஆண்டுகளுக்கு முன்பு சரவாக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடையே ஒரு புதிய கொரோனா தொற்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இது விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் என்ற சாத்தியம் குறித்து ஆரம்ப கட்ட ஆய்வில் இருப்பதாக நம்புகிறார்கள்.

இருப்பினும், தொற்று மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவ முடியுமா அல்லது மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துமா என்பதற்கு இன்னும் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் ஆராய்ச்சி தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

“ஒரு நோய்க்கிருமியாக உறுதிப்படுத்தப்பட்டால், இது மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் எட்டாவது தனித்துவமான கொரோனா தொற்றாக இருக்கலாம்,” என்று நேற்று மருத்துவ தொற்று நோய்கள் இதழில் வெளியான கட்டுரையில் இது இடம் பெற்றுள்ளது.

சிபு மருத்துவமனையில் நிமோனியாவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 301 நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை 2017 முதல் 2018 வரை பரிசோதித்தபோது, ​​எட்டு பேர் கோரைன் கொரோனா தொற்றுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிபு, பிந்துலு, டாரோ மற்றும் ஜுலாவ் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் ஆவர்.