செல்லியல் காணொலி | ஷாபி அப்துல்லா : 9.5 மில்லியன் ரிங்கிட் வழக்கு விவரங்கள் | 23 மே 2021
Selliyal Video | Shafee Abdullah : RM 9.5 million case details |23 May 2021
கடந்த வெள்ளிக்கிழமை (மே 21) கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கு தொடங்கியிருக்கிறது.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவருக்கு வழங்கிய இந்தப் பணம் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டது, வருமான வரி இலாகாவிடம் முறையாக அறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டது என்பது போன்ற 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கிறார் ஷாபி அப்துல்லா.
அந்த வழக்கின் விவரங்களை மேற்கண்ட காணொலியில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.