Home நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : பிரதமர் விளக்கம்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : பிரதமர் விளக்கம்

999
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்று கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய 3.0 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைச் செயல்படுத்தாது ஏன் என்பது குறித்து பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று விளக்கமளித்தார்.

சுகாதார அமைச்சு முதலாவது கட்டுப்பாட்டு ஆணையைப் போன்று அமுலாக்க பரிந்துரை செய்திருந்தது. எனினும் அப்படிச் செய்தால் அதன் காரணமாக கடுமையான பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்கவே அவ்வாறு செய்யவில்லை என மொகிதின் கூறினார்.

முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கத்தினால் நாடு பொருளாதார சீரழிவை எதிர்நோக்கியது. அத்துடன் பொருளாதாரத்தை மீட்க அரசாங்கம் பில்லியன் கணக்கான பணத்தை செலவிட நேர்ந்தது என்றும் மொகிதின் விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice

முழுமையாக எல்லாவற்றையும் மூடுவதுதான் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும். ஆனால் அதைச் செயல்படுத்துவதால் கடந்த முறை நாள் ஒன்றுக்கு 2.4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. எல்லா இனத்தவரும் பாதிக்கப்பட்டார்கள் என இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 23) இரவு பெர்னாமா தொலைக்காட்சிக்கும் ஆர்டிஎம்முக்கும் வழங்கிய நேர்காணலில் மொகிதின் தெரிவித்தார்.