Home நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 – முக்கிய கட்டுப்பாடுகள் என்ன?

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 – முக்கிய கட்டுப்பாடுகள் என்ன?

638
0
SHARE
Ad
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் – கோப்புப் படம்

புத்ரா ஜெயா : நேற்று வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெற்ற பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து அதன் முக்கிய முடிவுகள் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் ஆகிய இருவரும் இன்று மாலை 5.00 அளவில் வழங்கிய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • 80 விழுக்காடு அரசாங்க ஊழியர்கள் இல்லங்களில் இருந்தே பணியாற்றுவர்.
  • 40 விழுக்காடு தனியார் துறையினர் இல்லங்களில் இருந்தே பணியாற்றுவர்.
  • எதிர்வரும் மே 25-ஆம் தேதி இந்த புதிய கட்டுப்பாடு அமுலுக்கு வரும்.
  • 750 ஆயிரம் அரசு ஊழியர்களும் 6.1 மில்லியன் தனியார் துறை ஊழியர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பர்.
  • பேருந்து, எல்ஆர்டி இரயில் சேவை போன்றவற்றின் பயணிகள் எண்ணிக்கை மொத்த கொள்ளளவில் இருந்து 50 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
  • இதன் மூலம் நாள்தோறும் அதிகரித்து வரும் தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் இலக்கு கொண்டிருக்கிறது.
  • மேலும் வணிகங்களுக்கான நேரங்களும் குறைக்கப்படும்.
  • வர்த்தக மையங்கள் காலை 10.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.
  • வணிகங்கள் இனி காலை 8.00 முதல் மட்டுமே செயல்பட முடியும். முன்பு போல் காலை 6.00 மணிக்கெல்லாம் வணிகங்களைத் திறக்க முடியாது.
  • மருந்தகங்கள் இரவு 10.00 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
  • நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்.