Home நாடு சைட் சாதிக்கின் கைப்பேசியை காவல் துறை பறிமுதல் செய்தது

சைட் சாதிக்கின் கைப்பேசியை காவல் துறை பறிமுதல் செய்தது

842
0
SHARE
Ad

கோலாலம்பூர் : காவல்துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது மரணமடைந்த ஏ.கணபதியின் மரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் தனது கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

அதன் தொடர்பில் அவர் மீது விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர் அவரின் கைப்பேசியை இன்று பறிமுதல் செய்தனர்.

காவல்துறை விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தனது சமூக ஊடகங்களின் தரவுகள், விவரங்கள், தகவல் அட்டை (SIM Card) ஆகியவற்றோடு தனது கைப்பேசியையும் காவல்துறையினர் வசம் ஒப்படைத்ததாகவும் சைட் சாதிக் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் காவல் துறையினரின் விசாரணை தனது இன்ஸ்டாகிராம் பதிவு குறித்தது மட்டுமே எனத் தன்னிடம் கூறப்பட்டிருந்த வேளையில் தனது கைப்பேசியைப் பறிமுதல் செய்தது ஏன் என்றும் சைட் சாதிக் கேள்வி எழுப்பினார்.

இன்று சனிக்கிழமை (மே 22) பிற்பகலில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு டாங் வாங்கி காவல் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்.