Home வணிகம்/தொழில் நுட்பம் கொவிட்-19 தடுப்பூசிகள் உற்பத்தியால் உருவாகும் புதிய பணக்காரர்கள்

கொவிட்-19 தடுப்பூசிகள் உற்பத்தியால் உருவாகும் புதிய பணக்காரர்கள்

610
0
SHARE
Ad

இலண்டன் : கொவிட்-19 தடுப்பூசிகளின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பல நாடுகள் இந்தத் தடுப்பூசிகளை என்ன விலையானாலும் வாங்கி தங்களின் மக்களுக்கு செலுத்தி கொவிட் தொற்றிலிருந்து விடுபட பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தப் புதிய சூழ்நிலையால் கொவிட் தடுப்பூசிகள் தயாரிக்கும் மருந்து நிறுவனங்களின் வருமானம் அதிகரித்து வருகின்றது. அதன் காரணமாக அந்த நிறுவனங்களில் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும் தொழிலதிபர்களின் சொத்து மதிப்புகளும் உயர்ந்து வருகின்றன.

கொவிட் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் தொடர்புடைய 9 பேர் பில்லியன் கணக்கான சொத்து மதிப்பைக் கொண்டவர்களாக உயர்வு கண்டிருக்கின்றனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 19.3 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

உதாரணமாக மோடர்னா (Moderna) தலைமைச் செயல் அதிகாரி ஸ்டெப்பேன் பான்கெல் மற்றும் பையோ என்டெக் (BioNTech) தலைமைச் செயல் அதிகாரி உகூர் சாஹின் ஆகிய இருவரும் 4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தற்போது பெற்றிருக்கின்றனர்.

மோடர்னா மற்றும் பையோ என்டெக் இரண்டு நிறுவனங்களும் பிபைசர் நிறுவனத்துடன் இணைந்து கொவிட் தடுப்பூசிகளைத் தயாரித்தன.

இந்த நிறுவனங்கள் வரும் காலத்தில் கொவிட் தடுப்பூசி உற்பத்தியால் பெருத்த இலாபத்தை அடையும் என்ற எதிர்பார்ப்பால் அவற்றின் பங்கு விலைகள் பங்குச் சந்தைகளில் உயர்ந்து வருகின்றன.