Home நாடு 1எம்டிபி: நஜிப்பின் உடல்நிலை சரியில்லாததால் விசாரணை ஒத்திவைப்பு

1எம்டிபி: நஜிப்பின் உடல்நிலை சரியில்லாததால் விசாரணை ஒத்திவைப்பு

472
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, 1எம்டிபி வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை ஒத்திவைத்தது.

கடந்த வியாழக்கிழமை கண் அறுவை சிகிச்சை செய்த பின்னர் நஜிப் உடல்நலக்குறைவு விடுப்பில் உள்ளதாக தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்ததையடுத்து, நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா காலை விசாரணையை ஒத்திவைத்தார்.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நஜிப்பின் கண்ணில் வீக்கம் மற்றும் மங்கலான பார்வை ஏற்பட்டதாக முகமட் ஷாபி கூறினார். நஜிப்பிற்கு ஏழு நாட்கள் நோய்வாய்ப்பட்ட விடுப்பு வழங்கப்பட்டது என்றும் ஷாபி கூறினார்.

#TamilSchoolmychoice

தனது கட்சிக்காரருக்கு காசோலைகளில் கையெழுத்திட முடியவில்லை என்பதற்கான உதாரணத்தை முன்வைத்தார் ஷாபி.

எவ்வாறாயினும், நஜிப் உட்கார்ந்திருக்க வேண்டுமே தவிர, எதையும் படிக்கவோ எழுதவோ தேவையில்லை என்று கொலின் கூறினார்.

நீதிபதி ஒரு நாள் ஒத்திவைப்புக்கு அனுமதி அளித்தார். மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நஜீப்பை விசாரணைக்கு வருமாறு அவர் உத்தரவிட்டார்.