Home உலகம் பிபைசர் தடுப்பூசி பி16172 பிறழ்வுக்கு எதிராக 88 விழுக்காடு பயனளிக்கிறது

பிபைசர் தடுப்பூசி பி16172 பிறழ்வுக்கு எதிராக 88 விழுக்காடு பயனளிக்கிறது

481
0
SHARE
Ad

இலண்டன்: பிபைசர்-பயோன்டெக்கின் கொவிட்-19 தடுப்பூசி பி16172 பிறழ்வுக்கு எதிராக 88 விழுக்காடு பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கொவிட்-19 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இந்திய பிறழ்வுக்கு எதிராக 60 விழுக்காடு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று பிரிட்டன் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் வெளிப்படுத்திய இங்கிலாந்து பொது சுகாதார நிறுவனம் ஆய்வின் கண்டுபிடிப்பில் இது கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த இரண்டு தடுப்பூசிகளும் பிரிட்டனில் பரவலாகப் பதிவாகும் பி117 போன்ற பிற வகைகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி117 பிறழ்வுக்கு, பிபைசர் 93 விழுக்காடு செயல்திறனைக் கொண்டுள்ளது. அஸ்ட்ராசெனெகா 66 விழுக்காடு என்று அறிக்கை வெளிப்படுத்தியது.