Home நாடு கொவிட்-19: தொற்று வீதம் 1.21-ஆக பதிவு

கொவிட்-19: தொற்று வீதம் 1.21-ஆக பதிவு

623
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் தொடர்ச்சியாக ஒரு வாரமாக, கொவிட் -19 நோய்த்தொற்றின் வீதம் குறையவில்லை.

ஞாயிற்றுக்கிழமை, இது, ஆண்டின் மிக உயர்ந்த மதிப்பை, அதாவது 1.21 ஆக பதிவானது. இந்த எண்ணிக்கை முந்தைய நாள் பதிவு செய்யப்பட்ட 1.18 மட்டத்திலிருந்து உயர்ந்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் தொற்று விகிதங்கள் 1.0 க்கு மேல் பதிவாகியுள்ளன.

#TamilSchoolmychoice

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, ஜனவரி 13- ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, மார்ச் 3 அன்று பதிவு செய்யப்பட்ட 0.81 தொற்று வீதம், மிகக் குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.