கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30- ஆம் தேதி முடிவடையும் இலக்கு வைக்கப்பட்ட நிதியளிப்பு உதவி காலத்தை பேங்க் ராக்யாட் நீட்டிக்கும்.
அதன் செயல் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சைட் அப்துல் அஜீஸ் சைட் ஹாசனின் கூற்றுப்படி, தற்போதைய நிலைமை குறித்து பேங்க் ரக்யாட் மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்று கூறினார்.
இந்த உதவிக்கு விண்ணப்பிக்கக்கூடிய வாடிக்கையாளர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றும் இன்னும் புதிய வேலை கிடைக்காதவர்களாக இருக்க வேண்டும். இன்னும் ஊதியம் பெறாத விடுப்பில் உள்ள வாடிக்கையாளர்கள், சம்பளம் அல்லது வருமானத்தில் குறைப்பை அனுபவித்த வாடிக்கையாளர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும்.
இந்த இலக்கு வைக்கப்பட்ட நிதியளிப்பு உதவிக்கான விரிவாக்கப்பட்ட விண்ணப்பத்தை ஜூலை 1 முதல் பெறலாம். வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முழு பெயர், அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி எண்ணுடன் bankrakyatrnr@bankrakyat.com.my என்ற மின்னஞ்சல் வழியாக வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும்.