கோத்தா பாரு: கிளந்தானில் கிட்டத்தட்ட 10,000 பேர், குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் நேற்று வரை தடுப்பூசி பெறத் தவறிவிட்டனர்.
அவர்கள் அவர்கள் அவ்வாறு செய்யாததற்கு காரணமாக சுகாதார பிரச்சனைகள் தான் என்று மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஜெய்னி ஹுசின் தெரிவித்தார். தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக பெற முடியாதவர்களும், வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அவர் கூறினார்.
“இது தவிர, பலர் தடுப்பூசி மையத்திற்கு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. தடுப்பூசி பெற வராத அனைவருமே இரண்டாம் கட்டத்திற்கு பதிவுசெய்தவர்கள். ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னர் நாங்கள் பட்டியலைப் பெறும்போது, அவர்கள் கலந்துகொள்ளலாமா இல்லையா என்பதை அனைவரையும் தொடர்புகொள்வோம்,” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அவரது தரப்பினரும் தொடர்பு கொள்ளத் தவறிய சம்பவங்கள் இருப்பதாகவும், மேலும் தடுப்பூசி பெறுவதற்கான சந்திப்பின் அழைப்பு அறிவிப்புக்கு பதிலளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.