Home நாடு சூதாட்ட கும்பலின் சூத்திரதாரி என நம்பப்படும் ‘டத்தோஸ்ரீ’ கைது!

சூதாட்ட கும்பலின் சூத்திரதாரி என நம்பப்படும் ‘டத்தோஸ்ரீ’ கைது!

583
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சட்டவிரோத சூதாட்ட கும்பலின் சூத்திரதாரி என்று நம்பப்படும் ‘டத்தோஸ்ரீ’ பட்ட பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் 2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் அஸ்மி அபு காசிம் கூறுகையில், 55 வயதான அவர் ஜனவரி முதல் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள ஒரு சில வளாகங்களில் சூதாட்ட இயந்திரங்களை இயக்கி வருவதாகக் கூறினார்.

அவரது வீட்டில் சோதனை நடத்திய காவல் துறையினர் 579,001 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கம், 238,000 ரிங்கிட் மதிப்புள்ள மூன்று கடிகாரங்கள், ஏழு தங்கக் கம்பிகள் மற்றும் 58,250 ரிங்கிட் மதிப்புள்ள ஒரு லாக்கெட் மற்றும் 1.215 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

#TamilSchoolmychoice

ஆறு வங்காளதேச மற்றும் மியான்மர் பிரஜைகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மொத்தம் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் 17 முதல் 71 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.