Home நாடு நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு விடுத்த அழைப்பிற்கு இன்னும் பதில் இல்லை

நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு விடுத்த அழைப்பிற்கு இன்னும் பதில் இல்லை

532
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நான்கு நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த பிரதமர் மொகிதின் யாசினுக்கு விடுத்த அழைப்பு குறித்து இன்னும் பதிலளிக்காதது குறித்து லிம் குவாங் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், நெருக்கடி பற்றி விவாதிக்க நாடாளுமன்றம் கூட்ட வேண்டும் என்று அதன் தலைமைச் செயலாளர் லிம் குவாங் எங் கூறினார்.

“மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, மொகிதின் தனது தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈடுபடுத்த அவர் நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

“கொவிட் -19 க்கு எதிராக ஒரு விரிவான சமூக முயற்சியைத் தொடங்க நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்ற ஜசெகவின் சமாதானத்திற்கு மொகிதின் இதுவரை பதிலளிக்கவில்லை, ” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.