Home நாடு எல்ஆர்டி இரயில் விபத்து – பயணிகள் காயம்

எல்ஆர்டி இரயில் விபத்து – பயணிகள் காயம்

722
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை இரவு எல்ஆர்டி இரயில் சேவையில் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் பயணிகள் சிலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிளானா ஜெயா வழித் தடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இரயில் எண்கள் 80 மற்றும் 41 என இரண்டு இரயில்கள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டன. பல பயணிகள் இரயில் பெட்டியின் தரையில் காயங்களோடு இருக்கக் காணப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர் என எல்ஆர்டி இரயில் சேவை நிறுவனம் அறிவித்தது.

#TamilSchoolmychoice

கிளானா ஜெயா எல்ஆர்டி வழித் தடத்தில் கேஎல்சிசி வளாகம் அருகே சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்திருக்கிறார்.

மோதிக் கொண்ட இரண்டு இரயில்களில் ஒன்றில் பயணிகள் யாரும் இல்லை. மற்றொன்றில் பயணிகள் இருந்தனர்.

பயணிகள் சிலர் காயமடைந்தாலும், மரணங்கள் ஏதும் நிகழவில்லை.

இரவு 8.57 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. 8 பேர் காயமடைந்தனர் என தீயணைப்பு மீட்புப் படை தகவல்கள் தெரிவித்தன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களும், சம்பவத்தைப் பார்த்தவர்களும் சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர்.