Home நாடு எல்ஆர்டி இரயில் விபத்து அதன் வரலாற்றில் மோசமானது

எல்ஆர்டி இரயில் விபத்து அதன் வரலாற்றில் மோசமானது

561
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்றிரவு இரண்டு எல்ஆர்டி இரயில்களுக்கு இடையில் ஏற்பட்ட விபத்து அதன் சேவையின் வரலாற்றில் மிக மோசமான விபத்து ஆகும் என்று கூறப்படுகிறது. இது 1996- இல் செயல்படத் தொடங்கியது.

நேற்று நடந்த விபத்தில் 213 பேர் காயமடைந்தனர். அவர்களில் 47 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணோலிகள் விரைவாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.

நேற்றிரவு, எல்ஆர்டி இரயில்களான 181 மற்றும் 240 நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கிளானா ஜெயா எல்ஆர்டி வழித் தடத்தில் கேஎல்சிசி வளாகம் அருகே சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்த இவ்விரண்டு இரயில்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

#TamilSchoolmychoice

மோதிக் கொண்ட இரண்டு இரயில்களில் ஒன்றில் பயணிகள் யாரும் இல்லை. மற்றொன்றில் பயணிகள் இருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.