ஷா ஆலாம்: கொவிட்-19 பரிசோதனையை வீடு வீடாகச் செயல்படுத்த உத்தேசமாக அமல்படுத்துவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலிக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தன்னார்வலர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது, ஏனெனில் அதற்கு ஏராளமான அணிகள் தேவைப்படுகின்றன என்று அவர் கூறினார்.
“நாங்கள் இங்கு வீடு வீடாக பரிசோதனைகள் செய்ய விரும்பினால், எங்களுக்கு ஒரு பெரிய குழு தேவை,” என்று அவர் தெரிவித்தார்.
தற்போது, சிலாங்கூரில் தினசரி 2,000-க்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.