Home நாடு நோன்பு பெருநாளுக்கு மாநில எல்லைகளைக் கடந்ததால் தொற்று அதிகரிப்பு

நோன்பு பெருநாளுக்கு மாநில எல்லைகளைக் கடந்ததால் தொற்று அதிகரிப்பு

855
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரமலான் மாதத்தில் மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்கள் மற்றும் அடுத்தடுத்த நோன்பு பெருநாள் பண்டிகை காலம் ஆகியவை கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததற்கு காரணங்களாகும்.

இன்று தொற்று எண்ணிக்கை 7,000 ஐ தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

மத நடவடிக்கைகள் தொடர்பான 40 கொவிட் -19 தொற்று குழுக்கள் கடந்த வாரத்தில் மட்டும் பதிவாகியுள்ளன. 19 ஜோகூரில், 13 சிலாங்கூரில் மற்றும் மீதமுள்ள எட்டு மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் கிளந்தானில் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

“இந்த மத நடவடிக்கை திறல்கள் ரமலான் மற்றும் நோன்பு பெருநாள் முழுவதும் நிகழ்ந்தன. மேலும் இந்த திறள்களின் அதிகரிப்பு பொதுமக்களின் நடமாட்டம் ஆகியவற்றைப் பொறுத்தது.

“நாம் வெளியேறுவதை குறைக்க முடிந்தால், தொற்று வீதத்தைக் குறைக்கலாம், பரவுவதைக் குறைக்கலாம் மற்றும் கொவிட் -19 ஐக் கட்டுப்படுத்தலாம்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.