Home நாடு அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் மூட உத்தரவு

அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் மூட உத்தரவு

650
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் அவற்றின் செயல்பாடுகளை உடனடியாக மூடுமாறு அரசாங்கம் இன்று உத்தரவிட்டது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 அமல்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 12 பிரிவுகளைத் தவிர அனைத்து உற்பத்தித் துறைகளும் மூடப்பட்டுள்ளன என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

உணவு மற்றும் பானம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு செயல்பட அனுமதி வழங்கப்பட்டாலும், அது அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“எனவே, மதுபான தொழிற்சாலைகள் அடிப்படை தேவைகள் பிரிவில் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று அரசாங்கம் இன்று ஒப்புக் கொண்டது, ” என்று அவர் இன்று பிற்பகல் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.