Home No FB காணொலி : மலேசியத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு

காணொலி : மலேசியத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு

1024
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | மலேசியத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு | 03 ஜூன் 2021
Selliyal Video | Karunanidhi’s contributions to Malaysian Tamils | 03 June 2021

தமிழக முதலமைச்சர், சினிமா இரசிகர்கள் இன்றும் கொண்டாடும் `திரைப்பட வசனங்களைப் படைத்தவர், எண்ணிலடங்கா இலக்கியப் படைப்புகளை தமிழ் கூறு நல்லுலகத்திற்குத் தந்தவர், சிறந்த மேடைப் பேச்சாளர் என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பன்முகத் திறன்கள் வாய்ந்த கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் இன்று (ஜூன் 3).

மலேசியத் தமிழ் இலக்கியத் தளத்திற்கு பல முனைகளில் கலைஞர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். கலைஞரின் அந்தப் பங்களிப்பைப் பெற்றுத் தருவதில் பெரிதும் பாடுபட்டவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் பத்திரிகையாளருமான பெ.இராஜேந்திரன்.

#TamilSchoolmychoice

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு செல்லியல் வழங்கும் இந்த சிறப்புக் காணொலியில் கலைஞர் மலேசியத் தமிழ் உலகுக்கு வழங்கிய பங்களிப்பு குறித்தும் அவருடன் பழகிய இனிய தருணங்கள் குறித்தும் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் இராஜேந்திரன்.