Home இந்தியா தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் சூழல்!

தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் சூழல்!

722
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தடுப்பூசி விநியோகத்தை விரைந்து வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

தடுப்பூசிகள் தீர்ந்து விட்டால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதால், தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டி மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஜூன் மாத முதல் வாரத்திலிருந்தே தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.