கோலாலம்பூர்: ஒரு வர்த்தகத் துறை முக்கியமானதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மட்டும் தீர்மானிப்பதில்லை என்று அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.
கொவிட்-19 நுண்ணறிவு மேலாண்மை அமைப்பு (சிஐஎம்எஸ் 3.0) மூலம் செயல்படுவதற்கான அனுமதி கடிதம் வழங்க அனுமதிக்கப்பட்ட துறைகளை ஒழுங்குபடுத்தும் அமைச்சகங்கள் அமைச்சுக்கு உறுதிப்படுத்திய பின்னரே அது வழங்கப்படுவதாக அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இன்றுவரை, 15 அமைச்சகங்கள் சிஐஎம்ஸ் 3.0 முறையைப் பயன்படுத்தி அந்தந்த துறைகளின் கீழ் செயல்பட அனுமதி விண்ணப்பங்களின் மதிப்பீட்டு செயல்முறையை எளிதாக்குகின்றன.
அமைச்சகங்கள் விண்ணப்பங்களை உறுதிப்படுத்திய பின்னர், நிறுவனங்கள் சிஎம்ஸ் 3.0 மூலம் செயல்பட அனுமதி கடிதங்களை அச்சிடலாம் என்று அஸ்மின் கூறினார்.