Home இந்தியா இந்தியாவில் இனி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச தடுப்பூசி

இந்தியாவில் இனி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச தடுப்பூசி

574
0
SHARE
Ad

புதுடில்லி : இன்று திங்கட்கிழமை (ஜூன் 7) இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் இறுதியில் எதிர்வரும் ஜூன் 21-ஆம் தேதி முதற்கொண்டு இந்தியாவில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் இவலசமாக கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவித்தார்.

இந்த தடுப்பூசிகளில் 25 விழுக்காடு தனியார் மருத்துவமனைகளின் மூலமாக செலுத்தப்படும். இலவசமாகப் பெறாமல் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அதற்குரிய கட்டணம் செலுத்தி அந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக எவ்வளவு கட்டணத்தை விதிக்கலாம் என்பதை மாநில அரசாங்கங்கள் முடிவு செய்யும் என்றும் மோடி அறிவித்தார்.

முன்னதாகத் தனதுரையில் இந்திய விஞ்ஞானிகள் கொவிட்- 19 தடுப்பூசியை உருவாக்குவதில் அரும்பாடுபட்டு வருவதைக் குறிப்பிட்ட மோடி அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

சுமார் அரை மணி நேரம் நேரலையில் உரையாற்றிய மோடி கொவிட்-19 பரவலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார்.