Home நாடு கொவிட்-19: மரணங்கள் 82 – புதிய தொற்றுகள் 5,271 ஆகக் குறைந்தன

கொவிட்-19: மரணங்கள் 82 – புதிய தொற்றுகள் 5,271 ஆகக் குறைந்தன

1364
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஜூன் 7) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் மொத்தம் 82 மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட் தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,460 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை ஒருநாள் எண்ணிக்கை 5,271 ஆகக் குறைந்திருக்கின்றன.

சுகாதார அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டது.

#TamilSchoolmychoice

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாகப் பின்பற்றப்படுவதால் இந்த தொற்றுகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலான ஒருநாள் தொற்றுகள் 6,241 ஆக இருந்த நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 5,271 ஆக சரிவு கண்டிருப்பது ஆறுதல் ஏற்படுத்தும் தகவலாக அமைந்திருக்கிறது.

புதிய தொற்று கண்டவர்களில் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து அந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாவர். எஞ்சிய 5,271 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும்.

மேலும் 84,269 பேர் தற்போது மருத்துவமனைகளில் கொவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 902 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 447 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் தொற்றுகளில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒருநாளில் 7,548 ஆக பதிவாகியது. இதனைத் தொடர்ந்து கொவிட் தொற்றுகளில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 534,357 ஆக உயர்ந்திருக்கிறது.

புதிய தொற்றுகளைத் தொடர்ந்து இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 622,086 ஆக உயர்வு கண்டுள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது.1,374 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது.

அதனை அடுத்து சரவாக் 703 தொற்றுகளை ஒரு நாளில் பதிவு செய்தது.

கோலாலம்பூரில் 455 தொற்றுகள் பதிவாயின. ஜோகூர் மாநிலத்தில் 355 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. நெகிரி செம்பிலான் 571 தொற்றுகளைப் பதிவு செய்தது.