Home நாடு கொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது

கொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது

447
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தொற்றின் தொற்று வீதம் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு வீழ்ச்சியடைந்து வருவதைக் காட்டுகிறது.

சனிக்கிழமை 0.99 ஆக இருந்த இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 0.97 ஆக குறைந்தது.
லாபுவான் மிக அதிகமான தொற்று வீதத்தை, அதாவது 1.26 -ஐ பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான், சபா, கோலாலம்பூர், சரவாக், மலாக்கா, சிலாங்கூர், ஜோகூர் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களும் உள்ளன.

#TamilSchoolmychoice

பினாங்கு, திரெங்கானு, பகாங், கிளந்தான், கெடா, புத்ராஜெயா மற்றும் பெர்லிஸ் ஆகியவை 1.0 க்கும் குறைவான தொற்று விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள். மொத்தம் 10 மாநிலங்கள் தேசிய தொற்று வீத சராசரி எண்ணிக்கையை விட அதிகமாக பதிவு செய்துள்ளன.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, ஜனவரி 13- ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த தொற்று வீதம் மார்ச் 3 அன்று ப்திவு செய்யப்பட்டது. அப்போது தொற்று வீதம் 0.81 ஆக இருந்தது.

மே 23 அன்று அதிகபட்சமாக 1.21- ஆக இருந்தது.