Home உலகம் கொவிட்-19: வூஹான் ஆய்வகத்திலிருந்து வந்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரம் உண்டு

கொவிட்-19: வூஹான் ஆய்வகத்திலிருந்து வந்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரம் உண்டு

600
0
SHARE
Ad

வாஷிங்டன்: வூஹானில் உள்ள ஒரு சீன ஆய்வகத்தில் இருந்து கொரொனா நச்சுயிரி கசிந்ததாகக் கூறப்படும் கருதுகோள் நம்பத்தகுந்ததாகவும், மேலும் விசாரணைக்குத் தகுதியானது என்றும் அமெரிக்க அரசாங்க தேசிய ஆய்வகத்தின் கொவிட் -19 தோற்றம் குறித்த அறிக்கை கூறுவதாக தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் திங்களன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு 2020 மே மாதம் கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டது மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் இறுதி மாதங்களில் தொற்றுநோய்களின் தோற்றம் குறித்து விசாரணை நடத்தியபோது வெளியுறவுத்துறையால் அது குறிப்பிடப்பட்டது என்று அறிக்கை கூறியுள்ளது.

லாரன்ஸ் லிவர்மோர் மதிப்பீடு கொவிட் -19 நச்சுயிரியின் மரபணு பகுப்பாய்வு குறித்தது என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் நச்சுயிரியின் தோற்றத்திற்கான பதில்களைக் கண்டுபிடிக்க உதவியாளர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறினார்.

நச்சுயிரி தோற்றம் குறித்து சீனாவுக்கு வெளிப்படைத்தன்மை இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர், ஆயினும், பெய்ஜிங் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.