Home நாடு வயதான தம்பதிகள் வீட்டிலேயே மரணம்- ஒருவருக்கு கொவிட்-19 தொற்று

வயதான தம்பதிகள் வீட்டிலேயே மரணம்- ஒருவருக்கு கொவிட்-19 தொற்று

489
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: வயதான தம்பதிகள் இருவர் ஜூன் 6- ஆம் தேதி பாசிர் கூடாங்கில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொவிட் -19 தொற்று இருந்தது கணறியப்பட்டுள்ளது.

மனைவிக்கு 61 வயது, கணவருக்கு 68 வயதாகும்.

தம்பதியரின் 19 வயது வளர்ப்பு மகன் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலில்லாத போது, வீட்டிற்கு சென்றபோது அவர்கள் இறந்திருப்பதைக் கண்டறிந்தார்.

#TamilSchoolmychoice

செரி ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் கூறுகையில், சம்பவ இடத்தில் இந்தவொரு அசம்பாவிதமும் நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

விசாரணையில் இருவரும் 48 மணி நேரத்திற்குள் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

“கணவர் இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. மேலும், அவரது மரணம் மோசமான உடல்நிலைக் காரணமாக ஏற்பட்டது என நம்பப்படுகிறது.

“அவரது மனைவிக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்தது. அவரது மரணத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையின் விளைவாக கொவிட் -19 தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.

“விசாரணையில் தம்பதியரின் மரணங்களில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லை, இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.