Home நாடு பிரதமர் மாமன்னரைச் சந்தித்தார்

பிரதமர் மாமன்னரைச் சந்தித்தார்

949
0
SHARE
Ad
மாமன்னர் – மொகிதின் யாசின் – கோப்புப் படம்

கோலாலம்பூர் : மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா ஷா, இன்று புதன்கிழமை ஜூன் 9 தொடங்கி முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார்.

புதன்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கும், மாமன்னருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறும்.

இன்று புதன்கிழமை காலை மாமன்னருக்கும், பிரதமருக்கும் இடையிலான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது.

#TamilSchoolmychoice

காலை 7.50 மணிக்கு அரண்மனைக்குள் நுழைந்த பிரதமரின் வாகனம் காலை 9.00 மணியளவில் அங்கிருந்து வெளியேறியது.

அதைத் தொடர்ந்து இன்று பிகேஆர் கட்சித் தலைவரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமையும் மாமன்னர் சந்திக்கிறார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.