Home நாடு தாஜுடினுக்கு 1,500 ரிங்கிட் அபராதம்

தாஜுடினுக்கு 1,500 ரிங்கிட் அபராதம்

694
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மே 25-ஆம் தேதி எல்ஆர்டி இரயில் விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது முகக்கவசம் அணியத் தவறியதற்காக முன்னாள் பிராசரணா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மானுக்கு 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு 2021- இன் விதிமுறை 17 (1) இன் கீழ் இந்த குற்றம் செய்யப்பட்டுள்ளது என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் முகமட் சைனால் அப்துல்லா தெரிவித்தார்.

“1,500 ரிங்கிட் அபராதம் வழங்கப்படும்,” என்று அவர் புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கருத்து தெரிவித்த முகமட் சைனால், கொவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதில் தேசிய பாதுகாப்பு மன்றம் வகுத்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை பதிவு செய்ய மே 27 அன்று தாஜுடினை அழைத்ததாக காவல் துறை தெரிவித்தது.