Home நாடு கூடுதல் கொவிட்-19 தடுப்பூசிகள் சிலாங்கூருக்கு வழங்கப்படும்

கூடுதல் கொவிட்-19 தடுப்பூசிகள் சிலாங்கூருக்கு வழங்கப்படும்

489
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கூடுதல் கொவிட் -19 தடுப்பூசிகள் விரைவில் சிலாங்கூருக்கு வழங்கப்படும். மேலும் மெகா தடுப்பூசி மையங்களை (பிபிவி) அமைக்க இருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று தெரிவித்தார்.

இது ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்பு கொவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (சிஐடிஎப்) விவாதித்ததாக அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில கூறினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிலாங்கூரில் பெரியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

மேலும், பிபிவிக்கள் அமைக்கப்படும்போது, கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளில் 25 விழுக்காடு சிலாங்கூருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூருக்கான தடுப்பூசி ஒதுக்கீடு சமமற்றது மற்றும் நியாயமற்றது என்று சிலாங்கூர் சுல்தான் கூறியதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.