கோலாலம்பூர்: மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா வங்கி கடன் தள்ளுபடி மற்றும் வணிகங்களுக்கான மேம்பட்ட நிதி உதவியை எதிர்பார்ப்பதாக ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.
புதன்கிழமை மாமன்னரைச் சந்தித்த போது , மக்கள் எதிர்கொள்ளும் நிதி அவலநிலையையும், உயிர்வாழ்வதற்கு அரசாங்க உதவி தேவைப்படுவதையும் முன்வைத்ததாகக் கூறினார். மேலும், தானியங்கி வங்கி கடன் தள்ளுபடி விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.
“மாமன்னர் தானியங்கி வங்கி கடன் தள்ளுபடிக்கு (டி20 குழுவைத் தவிர்த்து) கால அளவைக் குறிப்பிடாமல் ஆதரவு தெரிவித்தார். மேலும் வேலைகள் மற்றும் வணிகங்களைக் காப்பாற்ற அதிக நிதி உதவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
வங்கிகளால் எடுக்கப்பட்ட இலக்கு உதவி அணுகுமுறை போதுமானதாக இல்லை என்று லிம் கூறினார்.