Home உலகம் ஜி7: கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு முதல் நேருக்கு நேர் சந்திப்பு

ஜி7: கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு முதல் நேருக்கு நேர் சந்திப்பு

538
0
SHARE
Ad

இலண்டன்: இந்த வாரம் கார்ன்வாலில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு மீண்டும் சிறப்பாக மீட்சி பெற, போரிஸ் ஜான்சன் சக உலகத் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.

2008 நிதி நெருக்கடியின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதும், சமத்துவமின்மையின் வடுவை சமாளிப்பதும் மிக முக்கியமானது என்று இங்கிலாந்து பிரதமரான அவர் கூறினார்.

கார்பிஸ் விரிகுடாவின் கடலோர ரிசார்ட்டில் ஒரு நாள் சந்திப்புக்குப் பிறகு, உலகத் தலைவர்கள் இரவு உணவிற்கு ராணியுடன் இணைந்துக் கொண்டனர். முன்னதாக, தலைவர்கள் ராணியுடன் ஒரு குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

மூன்று நாட்கள் கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்றுநோய் பாதித்ததை அடுத்து, இது உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜி7- இன் முதல் நேருக்கு நேர் உச்சிமாநாடு ஆகும்.