Home நாடு மதபோதகர் எபிட் லியூ பற்றிய தகவலை வெளியுறவு அமைச்சு பெற முயற்சிக்கும்

மதபோதகர் எபிட் லியூ பற்றிய தகவலை வெளியுறவு அமைச்சு பெற முயற்சிக்கும்

920
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரபல இஸ்லாமிய மதபோதகரான எபிட் லியூவின் சமீபத்திய முன்னேற்றங்களை வெளியுறவு அமைச்சகம் பெற முயற்சி செய்து வருகிறது. அவர் மனிதாபிமான பணியில் காசாவில் இன்னும் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

போதகர் நாட்டிற்கு திரும்பும் தேதியை தனது தரப்பு மேலும் சரிபார்க்கும் என்று அமைச்சின் துணை அமைச்சர் கமாருடின் ஜாபர் கூறினார்.

“நாங்கள் சரிபார்க்கிறோம்,” என்று அவர் சினார் ஹரியனிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மே 25 அன்று, இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு நன்கொடைகளை வழங்குவதன் மூலம் மனிதாபிமான உதவித் திட்டத்தில் எபிட் லியூ எகிப்துக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எகிப்துக்குச் சென்றதிலிருந்து தனது சமூக தளத்தில் எந்தவொரு பதிவும் இடாத எபிட் லியூவின் நடவடிக்கை நாட்டு மக்களுக்கு, குறிப்பாக அவரைப் பின்பற்றுபவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.