கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து, பெஜுவாங் கட்சியின் பதிவு உடனடியாக ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களில் ஒருவராக, பெஜுவாங் தலைவரை ஏற்றுக்கொண்ட மாமன்னரின் செயல் போற்றுதலுக்குரியது என பெஜுவாங் தலைமைச் செயலாளர் அமிருடின் ஹம்சா தெரிவித்தார்.
“ஓர் அரசியல் கட்சியின் தலைவராக துன் டாக்டரரை மாமன்னர் அங்கீகரித்திருந்தாலும், ஆச்சரியம் என்னவென்றால், உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் மூலம் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இல்லை. பெஜுவாங்கின் பதிவுக்கு ஒப்புதல் அளிக்காமல், பெஜுவாங்கை ஒரு முறையான அரசியல் கட்சியாக இயங்க சங்கப் பதிவாளரை பயன்படுத்துகிறார்கள், ” என்று அவர் கூறினார்.
பெஜுவாங்கின் பதிவை தாமதப்படுத்தும் நடவடிக்கை உண்மையில் அரசியல் நோக்கம் கொண்டது மற்றும் மத்திய அரசியலமைப்பை மதிக்கவில்லை என்று அவர் கூறினார்.