Home நாடு கொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

கொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

860
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு முழுவதும் கொவிட் -19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வகை 4 மற்றும் 5 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் ( 6,751 சம்பவங்கள்) முதல் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இது மே மாதத்தில் 30,287 சம்பவங்களாக அதிகரித்துள்ளது.

இரு பிரிவுகளுக்கான சம்பவங்களின் அதிகரிப்பு நேற்று நிலவரப்படி, இந்த மாதத்தில் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நாடு முழுவதும் 22,857 சம்பவங்கள் நேற்றுவரை பதிவாகியுள்ளன.

வகை 4 நோயாளிகள் பிராணவாயு தேவைப்படுபவர்களாகவும், 5- ஆம் வகை நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படும் நோயாளிகளாகவும் உள்ளனர்.

தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்பட்ட படுக்கை எண்ணிக்கைகள் 97 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று அவர் கூறினார்.