Home உலகம் ஈரோ 2020 : இன்றைய ஆட்டங்கள்; முன்னாள் வெற்றியாளர் ஸ்பெயின் களமிறங்குகிறது

ஈரோ 2020 : இன்றைய ஆட்டங்கள்; முன்னாள் வெற்றியாளர் ஸ்பெயின் களமிறங்குகிறது

769
0
SHARE
Ad

ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து) : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று திங்கட்கிழமை (ஜூன் 14) மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஸ்காட்லாந்து – செக் குடியரசு

முதல் ஆட்டமாக ஸ்காட்லாந்து – செக் குடியரசு இடையிலான ஆட்டம் (திங்கட்கிழமை ஜூன் 14) இரவு 9.00 மணிக்கு நடைபெறுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

போலந்து – ஸ்லோவாகியா

#TamilSchoolmychoice

போலந்து – ஸ்லோவாகியா (திங்கட்கிழமை நள்ளிரவு ஜன் 14) இடையிலான ஆட்டம் இரண்டாவது ஆட்டமாக நள்ளிரவு12.00 மணிக்கு நடைபெறுகிறது.

ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

ஸ்பெயின் – சுவீடன்

மூன்றாவது ஆட்டமாக ஸ்பெயின் – சுவீடன் இடையிலான ஆட்டம் (செவ்வாய்க்கிழமை ஜூன் 15) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெறுகிறது.

ஸ்பெயின் நாட்டின் செவில் (Seville) நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

1964, 2008, 2012 ஆண்டுகளில் நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய ஸ்பெயின் இன்று ஈரோ 2020-இல் முதன் முறையாக பங்கெடுக்கிறது.

மற்றைய ஆட்டங்களின் முடிவுகள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள் பின்வருமாறு:

இங்கிலாந்து 1 – குரோஷியா 0

ஆஸ்திரியா 3 – நோர்த் மாசிடோனியா 1

நெதர்லாந்து 3 – உக்ரேன் 2