Home 13வது பொதுத் தேர்தல் இப்ராகிம் அலி கண்ணீருக்கு விடை கிடைத்தது! தே.மு. ஆதரவு வேட்பாளராக பாசீர் மாஸ் தொகுதியில் போட்டி

இப்ராகிம் அலி கண்ணீருக்கு விடை கிடைத்தது! தே.மு. ஆதரவு வேட்பாளராக பாசீர் மாஸ் தொகுதியில் போட்டி

655
0
SHARE
Ad

Ibrahim-Ali---Sliderஏப்ரல் 20 – “பெர்காசா துணைத் தலைவர் சுல்கிப்ளி நோர்டினுக்கு மட்டும் தேசிய முன்னணி தொகுதி கொடுத்திருக்கிறதே! ஏன் எனக்கில்லை – நான் அழகாக இல்லாதவன் என்பதாலா?” என்றெல்லாம் அழுது புலம்பிய இப்ராகிம் அலியின் கண்ணீருக்கு இரங்கி தேசிய முன்னணி அவருக்கும் தொகுதி கொடுத்துவிட்டது.

அவர் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாசீர் மாஸ் தொகுதியில் அவர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த வேளையில் அங்கு போட்டியிட இருந்த தேசிய முன்னணி வேட்பாளர் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

பாசீர் மாஸ் தொகுதியில் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அசிசின் மகன் நிக் அப்டு நிக் அசிஸ் மக்கள் கூட்டணி சார்பாக போட்டியிடுகின்றார்.

#TamilSchoolmychoice

இதிலிருந்து தேசிய முன்னணியோடு பெர்காசா இணைந்து செயல்படுவது உறுதியாகியுள்ள நிலையில் பெர்காசாவின் இரண்டு முன்னணித் தலைவர்களுக்கும் தேசிய முன்னணி சார்பாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு தனது வேட்பாளரை அம்னோ-தேசிய முன்னணி விலக்கிக் கொண்டு அங்கு சுயேச்சையாக நிற்கும் இப்ராகிம் அலிக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது இதுதான் முதன் முறை என்று கருதப்படுகின்றது.

இதனால் அம்னோவில் உள்ள முக்கியத் தலைவர்களே அம்னோ தலைமைத்துவத்தின் மீது உச்சகட்ட வெறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.