Home நாடு ‘நான் அதிகாரத்திற்கு ஆசைப்படவில்லை’- மகாதீர்

‘நான் அதிகாரத்திற்கு ஆசைப்படவில்லை’- மகாதீர்

611
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்னமும் அதிகாரத்திற்கு ஆசைப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்தார்.

அவரால் முன்மொழியப்பட்ட தேசிய நடவடிக்கைக் குழுவை (மாகெரான்) வழிநடத்த தாம் முன்வந்ததாகக் கூறினார், ஏனெனில் அவர் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.

தற்போதைய தேசிய நெருக்கடியை தன்னைப் போன்ற அனுபவமுள்ள ஒரு நபர் கையாள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நம்புகிறார்.

#TamilSchoolmychoice

“நான் என்னைப் பற்றி யோசிக்கவில்லை. நான் ஓய்வெடுக்க மற்றும் அனுபவிக்க விரும்புகிறேன் (எனது தனிப்பட்ட நேரம்), ஆனால் இந்த பிரச்சனைக்கு பல வருட அனுபவம் உள்ள ஒருவர் தேவை, ” என்று அவர் இன்று முகநூலில் நேரடி அமர்வில் சினார் ஹரியானிடம் கூறினார்.

பிரதமராக இருந்த முதல் 22 ஆண்டுகளில் பல்வேறு நிதி மற்றும் அரசியல் பிரச்சனைகள் மற்றும் நாணயத் தாக்குதல்களைக் கையாண்டதாக மகாதீர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தேசிய கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க நம்பிக்கை கூட்டணியுடன் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சித்ததாக மகாதீர் ஒப்புக் கொண்டார், ஆனால் அவர் ஆறு மாதங்கள் பிரதமராக முன்வந்ததால் அது நிராகரிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.