Home நாடு நான்கு கட்ட மீட்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்

நான்கு கட்ட மீட்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்

356
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் முடிந்தபின் மலேசியர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காக நான்கு கட்ட மீட்பு திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் இரண்டு மாதங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூகத் துறைகள், பள்ளிகள் உட்பட, மூன்றாம் கட்டத்தில் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும். அதாவது செப்டம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியா இப்போது முதல் கட்டத்தில் உள்ளது. மூன்று அளவுகோல்களை பூர்த்தி செய்தால் ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு மாற்றம் செய்யப்படும்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 இன் தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை, நாடு முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசியின் முழு அளவை பெறும் நபர்களின் எண்ணிக்கை ஆகியவை இதன் அளவுகோல்கள் ஆகும்.

முதல் கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கு செல்வதற்கு, மலேசியா சராசரியாக தினசரி 4,000- க்கும் குறைவான சம்பவங்களைப் பதிவு செய்ய வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவு திறன் மிதமான மட்டத்தில் இருக்க வேண்டும். மலேசியர்களில் 10 விழுக்காடு பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

மூன்றாம் கட்டத்திற்குள் நுழைய, தினசரி சம்பவங்கள் சராசரியாக 2,000 சம்பவங்களுக்குக் குறைவாக இருக்க வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவு திறன் போதுமானதாகவும், மலேசியர்களில் 40 விழுக்காடு பேர் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும்.